கொடியது கோபம்

கொடியது கொடியது கோபம் கொடியது...
பாச நேரத்திலும் பாவ வார்த்தைகளை
காட்ட துடிக்கும் கோபம் கொடியது...
குணம் கொண்ட மனமும் சினம் கண்டவரை விட்டு விளகும்...
பனிந்து பழகும் பாங்கனை கூட பகைவனாய் மாற்றும் கோபம் கொடியது.....
குணத்தை கண்டு
தேகம் சிலிர்த்தாலும்
பாகமாய் சினம் இருந்தால்
மோகமும் மறையும்....
மீன் மறைத்த கதிரை வான் விடிய கண்டேன்....
என் மதி மறைத்த சினத்தை நான் மடிய காண்கிறேன்....
கொடியது கோபம்...
-இந்திரா

எழுதியவர் : இந்திரா (8-Aug-23, 6:41 am)
சேர்த்தது : இந்திரஜித்
Tanglish : kodiyathu kopam
பார்வை : 88

மேலே