பற்று

நாட்டுப் பற்றில் நற்குடிமகன்
பாட்டுப் பற்றில் கவிஞன்
கூட்டுப் பற்றில் மனிதன்
வீட்டுப் பற்றில் ஞானி
மோட்டுப் பற்றில் கோழி
காட்டுப் பற்றில் விலங்கு
மாட்டுப் பற்றில் உழவன்
ஆட்டுப் பற்றில் பூசாரி
சாப்பாட்டுப் பற்றில் சோம்பேறி
நோட்டுப் பற்றில் அரசியல்வாதி
கையூட்டுப் பற்றில் அதிகாரி
கோர்ட்டுப் பற்றில் வக்கீல்
நீட்டுப் பற்றில் அரசியல்
சீட்டுப் பற்றில் ரம்மியன்
ரோட்டுப் பற்றில் டோல்கேட்டன்

பற்றுக பற்றறான் பற்றினை என்று
ஏட்டில் எழுதி வைத்தான் பழைய வள்ளுவன்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Aug-23, 1:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே