காஞ்சிப் புராணம், திருநாட்டுப் படலம் - கலித்துறை
காஞ்சிப் புராணம், திருநாட்டுப் படலம்
கலித்துறை
(புளிமா விளம் விளம் விளம் மா)
(1, 5 மோனை)
பணங்கொள் பாம்பணி கம்பனார் பனிவரை பயந்த
அணங்கி னோடென்றும் அமர்ந்தினி தரசுவீற் றிருக்கும்
உணங்க ரும்புகழ்க் காஞ்சியை அகந்தழீஇ உம்பர்
வணங்க மேவரும் பாலிநாட் டணிநலம் வகுப்பாம்! 1
கலித்துறை
அடிக்கு ஐந்து சீர்கள், நான்கடி, அடி எதுகை இருந்தால் அவலோகிதம் கலித்துறை எனச் சொல்லும்.
ஆனால் ஓரசை இருந்தாலும் ஒரு சீராக எடுத்துக் கொள்ளும்;
ஆனால் சீரொழுங்கு இல்லையானால், பாடலாகாது; கேலிக்கு இடமாகும்.
பாடலுக்கு வாய்பாடும் முக்கியமாய் வேண்டும். பொழிப்பு மோனையும் வேண்டும்.