தேவியுடன் வந்திடுவான் காண்

சாவு வென்றான் துதிநீயும் நித்தம் பாடு
நோவு நோய்கள் இன்றிவா ழலாமாண்டு நூறு
சாவு வந்திடும் அந்திமவே ளையில் நினைத்தால்
தேவி யுடன்வந்து அச்சம் நீக்கி அருள்வான்

சாவு வென்றான் துதிநீயும் நித்தமும் பாடு
நோவு நோய்கள் இலாவாழ்வு வாழலாம் நூறு
சாவு வந்த அந்திமவே ளையிலே நினைத்தால்
தேவி யுடன்வந் தச்சமதை நீக்கியே அருள்வான்

சாவினை வென்றான் துதியினை நீபாடு
நோவுகள் நோயிலா நல்வாழ்வு வாழலாம்
சாவுன்முன் வந்திடும் போதில் நினைத்திடு
தேவியுடன் வந்திடுவான் காண்

சாவினை வென்றான் துதியினை நீபாடு
நோவுகள் நோயிலா நல்வாழ்வு -- ஆவிநீங்கும்
சாவுன்முன் வந்திடும் போதில் நினைத்திடு
தேவியுடன் வந்திடுவான் காண்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Aug-23, 3:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே