மிழலையின் நாயகா மீளுமோ புவியே --- நேரிசை ஆசிரியப்பா

மிழலையின் நாயகா மீளுமோ புவியே
(நேரிசை ஆசிரியப்பா)
மழலையோ குப்பை மடுவினில் ; வீதியில்
உழலும் நாய்க்கு உள்ளே ஊக்கம் ;
புழலுளும் பணமே புழக்கம் ;
மிழலையின் நாயகா மீளுமோ புவியே !
*****
(ஈரசைச் சீர்கள் நாற்சீரடி அடிதோரும் ஒரே
எதுகை 1 ம் மற்றும் 3 ம் சீரில் பொழிப்பு
மோனை ஈற்றயலடி முச்சீர் )
1 ம் அடி கருவிளம்/தேமா/கருவிளம்/கூவிளம்
2 ம் அடி புளிமா தேமா தேமா தேமா
3ம் அடி கருவிளம் புளிமா புளிமா
4ம் அடி கருவிளம் கூவிளம் கூவிளம் புளிமா

மிழலை = திருவீழிமிழலை என்ற சிவத்தலம்
***************

(அடுத்து = " கலிவிருத்தம் " )
*****
வாய்ப்பாடு = புளிமா /காய் /காய் /விளம்
அனைத்து அடிகளிலும் 1 ல் 3ல் மோனை

மழலை யோகுப்பை மாடத்தில் ! வீதியில்
உழலும் நாயதற்கு உள்கட்டில் ஊக்கமாம் ;
புழலில் இருந்தாலும் புழங்குவது கோடியில் ;
மிழலை யின்பதியே மீளாதோ நாடதும் !
******

எழுதியவர் : சக்கரை வாசன் (9-Aug-23, 7:38 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 21

மேலே