பாட்டியா கூப்பிட்டாங்க

உங்களைப் பாட்டியா கூப்பிட்டாங்க.
@@@@@
நம்ம தெருவிலே பாட்டி யாரும் இல்லையே!
@@@@@
பாட்டியா? எதிர் வீட்டில இருக்கிறாங்க.
@@@@@@
புதுசா குடி வந்தவர்களா இருக்குமா? அந்தப் பாட்டி யாருன்னே தெரியாது எனக்குத் தெரியாது. என்னை எதுக்கு அந்தப் பாட்டி கூப்பிட்டாங்க.
@@@@@@
அவுங்க பாட்டி இல்லீங்க. பாட்டியா.
@@@@@
பாட்டி இல்லாமா எப்படி 'பாட்டியா'ன்ற கேள்வி?
@@@#@#@
ஐயா அவுங்க பாட்டி இல்லை. அவுங்க ஒரு வயதான இந்திக்காரத் தாத்தா.
@@@##@
தாத்தாவா? பாட்டியா யாரு?
@@@@@
அவர் தான் பாட்டியா?
@@@@@@
தாத்தா எப்படி பாட்டி ஆனார்?
@@@@@@
தம்மனா பாட்டியா-ங்கிற பேரைக் கேள்விப்பட்டிருக்கிறீங்களா?
@@@@@@
நான் படம் பார்க்கிறதில்லை.
@@@@@@
வட மாநிலங்களில் பலரோடு பேருகூட 'பாட்டியா'ங்கிற பேரையும் சேர்த்துக்குவாங்க. எதிர் வீட்டுக்கு குடி வந்திருக்கிற தாத்தா பேரு சுரேஷ் பாட்டியா.
@@@@@@
அப்படியா? எதுக்கு என்னைக் கூப்பிட்டார்?
@@@@@@
நம்ம ஊரில் நீங்கள் தான் பிரபல சோதிடர்னு யாராவது சொல்லியிருப்பாங்க. அவரால் நடக்க முடியாது. சக்கர நாற்காலி தாத்தா.
@@@#@
சரி. சரி. வர்றேன்னு சொல்லு.
@@@@####@@@@@@@@@@@@@@@#@
Bhatia - Surname