சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 30
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 30
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆடி : 30
°°°°°°°°°°°
சங்கரன்கோவில் மண் தலம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தென்பாண்டி நாட்டில்
தாமிரபரணி நதிக்கரையின்
இரு ஓரங்களிலும்
274 சிவாலயங்கள்
சிறப்புற்று விளங்கிடவே
சிவாலயங்கள் திரி(3) பஞ்ச(5)
அஷ்ட(8) நவ(9) தச (10)
எண்ணிக்கையில் பிரித்து
முன்னோர் இறைவனை வேண்டியதாக
தென்காசித் தலப்புராணமும்
திருக்குற்றாலத் தலப்புராணமும் கூறுகின்றன
தென்பாண்டி நாட்டின்
பஞ்சப் பூதத் தலங்களில்
மண்தலம் சங்கரன்கோவில்
அக்னித்தலம் கரிவலம் வந்த நல்லூர்
நீர்த்தலம் தாருகாபுரம்
காற்றுத்தலம் தென்மலை
ஆகாயத்தலம் தேவதானம்
சங்கையில் அவதரித்து
சங்கமித்து அருள்புரியும்
சங்கரலிங்கரின் பெயரிலேயே
சங்கரநயிணார்கோவில் தலப்பெயரில்
ஊர்ப்பெயரும் அழைக்கப்பட காலப்போக்கில் மருவி
ஊர்மக்கள் சங்கரன்கோவிலென்றே அழைத்தனர்
வைனவர்கள் ரோட்டூர்யென அழைப்பர்
ராசபுரம் பூகயிலாயம் புன்னைவனம்
சீராசபுரம் கீராசை வாமாசைபுரம்
கூழைநகர் என்ற பெயர்களும்
ஆவுடையம்பன்கோவில் தவசுக்கோவில்
இப்பெயர்களும் தலத்துக்கு உண்டு
சங்கரலிங்கத்தை வாராசைநாதன் வைத்தியநாதன்
சீராசைநாதன் புன்னைவனநாதன் கூழையாண்டி எனப் பெயர்களும் உண்டு
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்