விடுதலை விடுதலை
விடுதலை விடுதலை !
🧑🏿✈️🧑🏿✈️🧑🏿✈️🧑🏿✈️🧑🏿✈️🧑🏿✈️🧑🏿✈️
எங்கே சுதந்திரம் என்பது
எனக்கு இன்னும் விளங்கவில்லை !
வேங்கை வயல்களும் நாங்குநேரியும்
நவில்வது புரியவில்லை /
அயோத்தி மனிப்பூர் ஆட்டங்கள்
இங்கே ஒன்றும் ஓயவில்லை !
ஜாலியன் வாலாபாக்குகள் இன்றும்
தொடர்ந்திடும் அவலநிலை இதில்
விடுதலை என்பது வலியோர்
உடமையே ஐயம் ஏதுமில்லை! இனியும்
வருவார் காந்தி சுபாசு
என்பது மடமையின் உச்சநிலை!
எழுவாய் இளைஞனே எளியோர்
சுதந்திரப் போரினை நடத்திடவே!
பயனிலை வெற்றுக் கூச்சலால் வெற்றி பெறும்வரைப் போரிடுவோம்!!
-யாதுமறியான்.