அவளின் கடைக்கண்
மனம் மகிழும் இனியமாலை
பிடித்த பாடலின் முனுமுனுப்பு
இதழ்களில் தேங்கியரை புன்னகை
அமைதியில் தோய்ந்த மதி
ஆனந்த நர்த்தனத்தில் உடற்கூறு....
திடுக்கிடும் திடீர் மாற்றமதில்
இதயம் அதிவேகமாக அதிர
லப்டப்லப்டப் ஓசை ஓங்கியது
விரைவாக விழி திருப்பினேன்
அவள் கடைவிழியெனை நோக்கியது....
கவிபாரதீ ✍️