காதல் கவிதை

சித்திரத்தைப் பேசும் பாவையாக்குவான் ஓவியன்
சித்தம் கலக்க வைப்பான் சிற்பி
செதுக்கி வைத்த கற்சிலைக்கு உயிர்தந்து
பேசா மடந்தையாய் இருக்கின்றாய் பெண்ணே
கொஞ்சம் உன்மீது நான் எழுதிய
இந்த கவிதையைப் படித்துப் பார்
உன் மௌனம் கலைந்திடும் பின்னே
உன்னழகு முகத்தில் புன்னகை தவழும்
காதல் மந்திர வார்த்தைகளால் நான்
உனக்கு தீட்டிய காதல் கவிதையடி இது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (18-Aug-23, 7:26 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 180

மேலே