சோமநாதா நாமம் இவனுக்கு நல்லசிவம்
காமம் எழுதிடுவான் காதல் எழுதிடுவான்
ஓமெனும் நாமம் ஒருநாளும் ஓதிடான்
நாமம் இவனுக்கு நல்லசிவம் என்சொல்வேன்
சேமம்தான் உண்டோநீ செப்பு
காமம் எழுதிடுவான் காதல் எழுதிடுவான்
ஓமெனும் நாமத்தை ஓதிடான்- சோமநாதா
நாமம் இவனுக்கு நல்லசிவம் என்சொல்வேன்
சேமம்தான் உண்டோநீ செப்பு
கவிக்குறிப்பு :
சோமநாதா --சோமன் =சந்திரன் சோமநாதன் --சிவன்
குஜராத் சௌராஷ்டிர பகுதியில் கடலோரத்தில்
அமைந்திருக்கிறது சோமநாத ஆலயம்
இதைக் கொள்ளையடிக்க பதினெட்டு முறை
படைந்தெடுத்து வந்தான் கஜினி முகமது -வரலாறு நாமறிவோம்