புனைகுழல் மாதவள் புன்னகை - எழுசீர் விருத்தம் 8
எழுசீர் விருத்தம் 8
(விளம் + விளம் + விளம் + விளம்-
மா + மா + மாங்காய்)
(1, 5 சீர்களில் மோனை)
அனைவரும் மகிழ்வுட னின்பமா யிருந்திடி
..னகிலம் என்றும் நன்றாகும்;
எனைத்துணைத் துன்பமும் எய்திடா வகையினி
..லெளிமை வாழ்வே இனிதாகும்!
மனக்குறை நீக்கியே மகிழ்வுடன் வாழ்தலே
..மகிழ்ச்சி யென்றும் நிலையாகும்;
புனைகுழல் மாதவள் புன்னகை வாழ்வினிற்
..போற்றும் மகிழ்வைப் பெரிதாக்கும்!
- வ.க.கன்னியப்பன்