எந்தவழி தேறுமோ இங்கு -- ஒரு விகற்ப நேரிசை வெண்பா

எந்தவழி தேறுமோ இங்கு
*****
(ஒரு விகற்ப நேரிசை வெண்பா)

தந்தையோ போதையுற , தாவிடும் வாரிசு
சந்தி யிலுற்று சருக்கிட -- சொந்தமறும் ;
உந்துவழி ஏதுமின்றி ஊரதும் தூற்றிட ,
எந்தவழி தேறுமோ யிங்கு !
****
(தாவிடும் வாரிசு = கைக் குழந்தை)

எழுதியவர் : சக்கரை வாசன் (22-Aug-23, 3:07 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 32

மேலே