மகாராசன் என்றுறவும் மாண்புடனே வாழ்த்திடுவர் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(காய் 4)
அகங்காரம் நீக்கியென்று மன்புடனே
..நாம்நடந்தால்
சுகவாழ்வு வாழ்ந்திடலாம் சொந்தங்கள்
..போற்றிவர;
மகாராசன் என்றுறவும் மாண்புடனே
..வாழ்த்திடுவர்
புகழ்மாலை வேறெதற்கு போற்றிடுவோம்
..உறவினையே!
- வ.க.கன்னியப்பன்