தவறு சிறுசா இருக்கையில் திருத்திக் கோ
ஆசிரியப்பாக்கள்
கிறுக்க மீண்டும் மீண்டும் அதையே
கிறுக்கவும் அரைத்த மாவென் றேன்யான்
அரைத்த மாவை மூடன் மீண்டும்
அரைப்பன் ஆதலின் விடுமே என்றேன்
விட்டா னில்லை விகட வீணர்
மந்தனாய் செப்புநாய் மலையாம் கனியும்
அந்த பூநறும் பூநிழல் நறுநிழலும்
மீறி ஐந்து ஆரசை
கீறினார் எழுத்தில் கிடைக்கும் தேடே
கவியென்பார் கலியிடை யிலுங்கனி புகுத்தும்
பூநறும் பூநிழல் நறுநிழல் அனைத்தும்
மீறி ஐந்து ஆரசை எழுதும்
சுட்டிக் காட்ட குக்கல் குரைக்கும்
கழுதையாய் கடிக்கும் மறைக்கும் பழிக்கும்
அழிக்கும் ஐய்ய கோவென
அழுமே அதைத்திருத் தலும்நம் கடனே
எழுத்தில் கலித்துறை கலிவிருத்ததில் இடையில் கனியும்
பூச்சீர் நறும் பூச்சீர் நிழல்சீர் நறுநிழல ஐந்து ஆறு அசைச
சொல்லையும் எழுதியுள்ளார். கேட்டால் பாவினம் என்று
மழுப்புகிறார்.. கீழே பாருங்கள்
தானொரு ஊற்று கடலலை என்று தகாத சீர்களை கையாளுகிறார்
" கடலலை யாருக்கேனும் காத்திருக்குமா ""
யாருக்கேனும். = தேமாந்தன் பூ
காத்திருக்குமா = கூவிளந்தன் பூ
தவறை திருத்தா தவர்பேடாம் சாபம்
தவறெனப்போம் கூறுவார் தாம்
......