குமரனடி கிட்டிடுமே -- கலிவிருத்தம்

குமரனடி கிட்டிடுமே
****
(கலிவிருத்தம் -- காய் -- 4 )

உறவுதனைப் போற்றிடவே ஊருமுனைப்
---போற்றிடுமே ;
மறமதனைப் புறமொதுக்கி மறையதனைப்
---போற்றிடவே,
கறவையின நாயகனாம் கண்ணனவன்
---பார்வையிட
குறமகளின் கொற்றவனாம் குமரனடி
---கிட்டிடுமே !
*****
ஐயா வ. க. கன்னியப்பன் அவர்களின் பதிவு
" மாண்புடனே வாழ்ந்திடுவீர் " என்ற
கலிவிருத்த பதிவினை பின்பற்றி
அப்பதிவின் ஈற்றடியின் ஈற்றுச்சீர்
" உறவினையே " என்ற சொல்லை
முதலடியில் முதற்சீராய் வைத்து பதிவிட்ட
பதிவு.

எழுதியவர் : சக்கரை வாசன் (24-Aug-23, 8:48 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 23

மேலே