நிழல் தேடி

நிழல் தேடி

நிழல் தேடி
அலையும்
நிழல் நான்

நிழலுக்குள்
இருந்த
எல்லாமே

இன்று நிர்வாண
வெளிச்சமாய்

வெட்டி சாய்த்து
மொட்டையாக்கி
படுத்து கிடக்கும்
ஜீவன்களாய்
பல்லாயிரம் மரங்கள்

அடை மழை
முடிந்த பின்னும்
கிளையில்
சேர்த்து வைத்து
குலுங்க சிரித்து
சாரலில் நம்மை
சிலிர்க்க
வைக்கவோ

வெயிலின் தகிப்பை
தன்னுள் தாங்கி
குளுமையின்
சுகத்தை நிழலில்
தரும் சுகமோ

பூத்து குலுங்கி
புன்னகை
தரும் புன்சிரிப்போ

இனி
காண கிடைக்க
பல நூற்றாண்டுகள்
தேவை

படுத்து கிடந்த
மரங்களின்
சாவுக்கு
மெளனமாய்
கண்ணீர் சிந்தும்
மர நிழல்களின்
நிசம் நான்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Aug-23, 3:55 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : nizhal thedi
பார்வை : 116

மேலே