இயற்கையும் அவளும்
வசந்தத்தின் புதுமழைத் தூறல் துளிகள்
பொய்கையில் பூத்துக் குலுங்கும் செந்தாமரைப்
பூக்கள்மேல் மெல்ல மெல்ல தூறலாய் விழுந்தன
மழைத் தூறலுக்கும் இப்படி ஓர் ஆசையா
மலரும் தாமரை செவ்விதழ்களை தூறல்
முத்துக்களால் நனைத்து மகிழ்ந்திட
தூறலில் நனைந்த தாமரை இதழ்கள்
ஆதவன் ஒளிகிரணங்கள் பட்டு இன்னும் சிவந்து தங்கத் தாமரையாய் மலர்ந்து மகிழ்ந்தன
இப்படி ஓர் இயற்கைக் காட்சியைக்
கண்டுகளித்த நான் கற்பனையில்
என் காதலிக்கு அவள் கன்னத்தில்
முத்து மழைதந்திட அவள் கன்னங்கள்
தடாகத் தாமரைபோல் இன்னும்
சிவந்து அவள் முகத்தை தங்க
நிலவாய் ஆக்குவதுபோல் கண்டேன்
கண்திறந்தேன் என்முன்னே இன்னும்
அந்த தாமரைப்பூத்த தடாகம் காட்சியில்