பறவைகளாலே ஞாலம் - சீர் செய்யப்பட்ட பா

கலிவிருத்தம்

மா விளம் காய் மா

குருவி கோழிகள் ஆந்தையினம் புறாக்கள்
கருணை காகமும் மீன்கொத்தி குயில்கள்
கருடன் வல்லுறு மரங்கொத்தி கிளிகள்
குருகு அன்றிலும் மீன்கொத்தி மயில்கள் (க)

மா மா காய் காய்

இராசா ளிகாடை கெளதாரி வாத்துகளும்
சிரால்கள் புதார்சிட் டுகளும் செந்தலையான்
அராசால் சிலம்பன் ஈப்பிடிப்பான் கல்குருவி
கரீச்சான் புறாக்கள் கதிர்க்குருவி பூங்குருவி (உ)

மா காய் காய் காய்

சின்னான் வானம்பா டிநெட்டையின காலிகளும்
சின்ன கீச்சான்கள் பனங்காடை பஞ்சுருட்டான்
பன்கள் உழவாரன் பக்கிகளும் கூகைகளும்
மென்மை ஆலாக்கள் கோட்டான்கள் உள்ளான்கள்
(ங)

மா மா காய் காய்

அரிவாள் மூக்கன் பூநாரை கிளுவையினம்
கரண்டி வாயன் நீர்க்காகம் குழாய்மூக்கி
பெரிய தாரா விரால்மீன்கள் அடிப்பான்கள்
குருங்கா டைநா மக்கோழி உப்புகொத்தி (ச)

காய் விளம் விளம் காய்

தீக்காக்கை மரகதப் புறாவகை இருவாயன்
தாக்குகின்ற தகைவிலான் காலிகள் கீச்சான்
நீக்கமிலா நிறைந்தது ஞாலமாம் இங்கு
ஆக்கமுடன் வாழ்ந்திட முனைந்திடின் நலமே. (ரு)

காய் காய் விளம் விளம்

முந்நூற்று இருபத்து எட்டின வகைகளாம்
இந்நூற்று ஆண்டுவரை உலகிலே உள்ளன
அந்நியர்கள் என்றுகூற இல்லையே எவருமே
செந்தமிழால் இதனையுமே எழுதினேன் கேளிரே. (சா)
— நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (21-Aug-23, 2:38 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 55

மேலே