பறவைகள் பலவிதம்

அப்பா...
@@@@@
என்னம்மா பக்ஷி (Pakshi)?
@@@@@@
நான் நாளையிலிருந்து கல்லூரிக்குப்
போகமாட்டேன்?
@@@@@@
என்னம்மா சொல்லற?
@@@@@@
ஒரு வாரமாக ஒரு பையன் என்னைப் பாக்குற நேரமெல்லாம்
"🐦🐦🐦 பறவைகள் பலவிதம்,
ஒவ்வொன்றும் ஒரு விதம்"னு பாட்டுப் பாடறான். இதைப் போயி யாருகிட்ட நான் புகார் கொடுக்கறது? அவன் ஏன் என்னைப் பாக்குற போதெல்லாம் இந்தப் பாட்டைப் பாடறான்?
@@@@#####
பக்ஷிச் செல்லம், உம் பேருக்கு என்ன
பொருள் (அர்த்தம்)னு தெரியுமா?
@@@@@@@
இந்திப் பேருன்னு தெரியும். ஆனா இந்தப் பேருக்கு என்ன பொருள்னு நீங்க இதுவரை எனக்குச் சொல்லவே இல்லையே!
@@####@#@@#
பக்ஷிக் கண்ணு இந்தில 'பக்ஷி'ன்னா 'பறவை'னு பொருள். இதைத் தெரிஞ்சுட்டுத்தான் அந்தப் பையன் உன்னைப் பாக்கும்போது அந்தப் பாட்டைப் பாடறான். உலகத் தமிழர்கள் யாரும் வைக்காத பேரை நானும் உன் அம்மாவும் உனக்கு வச்சோம்.
@@@@@@@
எதுக்கு அப்பா எனக்கு 'பறவை'னு பேரு வச்சீங்க?
@@@@@@
பக்ஷி செல்லம், பறவைகள் எல்லாம் அழகானவை, சுறுசுறுப்பானவை. அதனால் தான் உனக்கு இந்தப் பேரை வச்சோம்.
@@@@@@@@
சரி கிண்டல் பண்ணற பையனை என்ன செய்யறது?
@@@@@@#@@
அவன்கிட்ட சொல்லு "டேய் நீ கிண்டல் பண்ணி பாட்டுப் பாடறதை நிறுத்து. உன் மேலே புகார் எழுதிக் கொடுத்தா நீ கம்பி எண்ணவேண்டியிருக்கும்"னு சொல்லு. அவன் வாலைச் சுருட்டிட்டு போயிடுவான். அடுத்தவர்கள் மனம் நோகற மாதிரி கிண்டல் பண்ணறது சட்டப்படி குற்றம். அதுவும் பெண்களைக் கிண்டல் பண்ணினா கடுமையான தண்டனை கிடைக்கும்.
@@@@@@
சரிப்பா. நீங்க சொல்லறபடி செய்யறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Pakshi = Bird.
@@@@@##

எழுதியவர் : மலர் (24-Aug-23, 6:23 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 117

மேலே