மறுமணம்

மறுமணம்
°°°°°°°°°°°°°

இயற்கை கொஞ்சி விளையாடும் மேலக்கலங்கலில் மாதவன் என்ற இரு சக்கர வாகன பழுது பார்ப்பவன் மற்றும் இரு சக்கர பந்தய வீரர் மிடுக்குடன் மாநிறத்தில் மேலக்கலங்கலில் கண்னனாக ரோஜா மொட்டுகள் இருக்கும் இடத்தில் தான் வண்டுகள் இருப்பதைப் போன்று
தாவணிக் குமரிகள் படைச் சூழ இருப்பவன் இந்த மாதவன்

மாதவன் அழகில் மயங்கியவர் சிலப் பேர்
காதலில் வீழ்ந்தவர் கன்னிகளில் பலப் பேர் ,இவனை அவர்கள் காதலித்தனர் அம்மா இன்றி பாட்டியுடன் வளர்ந்தவன்
ஆகவே ,பாட்டி வாக்கே அவனுக்கு மந்திரம்

முதியோர்கள் வளர்க்கும் எந்த பசங்களும் தவறுகள் செய்வதில்லை
இது நாடறிந்த உன்மை..இன்று வாலிபர்கள் தடம் மாறிப்போக காரணம்
வீட்டின் முதியவர் முதியோர் இல்லத்தில்
இளையோர் மதுபான கடையில் இயன்றவரை முதியோரை காத்திடுவோம் ..

உறவுக்குள் பூத்த மாதவியை பெண் பார்க்கலாம் என்று பாட்டி மாதவனிடம் கூற ,மாதவன் பாட்டியை கட்டி அணைத்து உனக்கு சாகும் வரை கஞ்சி ஊத்தனும் அது யாராக இருந்தாலும் நீ பார்க்கும் பெண் எனக்கு மணப்பெண் என்று மாதவன் சொல்ல .சரிடா இன்றே மாதவி அப்பன்கிட்ட பேசிட்டு வாரேன் என்று சொல்லி பாட்டி ஊர் வழி செல்ல ஊர்தி ஏறினாள்

பெண் பார்க்கும் படலம் முடிந்து வான் உயர பந்தலிட்டு வானவில்லினை தோரணங்களாக கட்டி மிதந்ததிடும் கூட்டத்தின் நடுவில் அன்னப்பறவை போல் மேடை கெட்டி தாளம் கொட்ட தாலி கட்டினான் மாதவன் மாதவிக்கு.

பலகாரம் பல செய்து பந்தியில் பறிமாற சொந்தங்கள் சாப்பிட்டு அனைவரும் நிறைந்த வயற்றுடன் நிறைவான புன்னகை உதட்டில் மணமக்கள் இருவரும் பொறுத்தம் அருமையென்று ஊரோடு புகழ் பாட

சாலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றாள் சாலைவாசிகள் நின்று கன்னத்தில் கை வைத்து ரசிப்பார்கள் அப்படியொரு சோடி

தீபாவளி வந்தது தீபாவளி விருந்துக்கு மாதவி அப்பா அழைத்திட இருவரும் இருசக்கர வாகனத்தில் பயணிக்க புதுச்சோடி புதுச்சேரி சாலையில் சிட்டாக பறக்க எதிரே எமனும் எருமையில் வர சாலையில் உள்ள பள்ளத்தில் வாகனத்தின் சக்கரம் இறங்க நிலைதடுமாறி வாகனம் மூன்று பல்ட்டி அடிக்க மாதவன் கீழே சரிந்தான் உயிர்க்கவசமான தலைக்கவசம் அணியாத காரணத்தாலும் இரு சக்கர பந்தய வீரர் என்ற தலைக்கணத்தால் விவேகம் மறந்து வேகமாக சென்றதால் தலையில் அடிபட்டு உயிரை விட்டு தலை சரிந்தான் .மாதவியை மயக்கத்தில் இருந்தவளை மருத்துவமனையில் சேர்க்க உயிர் பிழைத்தாள் .

மாதவி இளம் வயதில் கைம்பெண்ணாக காட்சி தந்ததாள்
மாதவியை ராசி இல்லாதவள், மாதவனை சாவடித்த சனியன் என்று ஊரார் வசை பாடுவது

செடியில் பூக்கள் உதிர்வது கிளையின் குற்றமோ, வேரின் குற்றமோ இல்லை பூவுக்கு ஒரு நாள்தான் வாழ்வு என்று நிர்ணயித்த இறைவன் குற்றம் .

பூக்கள் உதிர காரணம் இல்லாத கிளையையும் வேரையும் வெட்டுவது எவ்வளவு முட்டாள்தனமோ

கைம்பெண்களை வசை பாடுபவர்களும் முட்டாள்களே .

ஊரார் வசை பாடுவதை மாதவியாள் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முறன்றாள் .இதை அறிந்த பாட்டி முதுமையிலும் புதுமை பெண்ணாக மாறி கைம்பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுக்க முடிவெடுத்தாள்

மாதவன் இடத்தில் அவன் தம்பி விஜயை மாதவிக்கு இரண்டாம் திருமணம் செய்திட முடிவெடுத்தாள்

மறுமணம் மணந்தது பூவுடன் மாதவி வாழ்வும்

மாதவி போல் செடியில் பட்ட பெண்களை மீன்டும் உரம் போட்டு மரமாக்கும் பச்சையுள்ளம் கொண்ட பாட்டிமார்கள் மேலக்கலங்கலில் வாழ்வதால் ஊரின் பெருமை பார் முழுமையும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது....

என்றும் சமூக நலனில்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (23-Aug-23, 6:02 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : marumanam
பார்வை : 361

மேலே