சோலைக் குளிர்விழிச் சோம்பேறி காக்கவைப்பாள்
நீலவண்ண வானத்தில் நீந்திடும் வெண்ணிலா
மாலைப் பொழுதினில் மஞ்சளிலும் வந்திடும்
சோலைக் குளிர்விழிச் சோம்பேறி காக்கவைப்பாள்
காலம்தாழ்த் திப்பார்ப்பாள் பார்
நீலவண்ண வானத்தில் நீந்திடும் வெண்ணிலா
மாலைப் பொழுதினில் மஞ்சளில் -- நீலநிற
சோலைக் குளிர்விழிச் சோம்பேறி காக்கவைப்பாள்
காலம்தாழ்த் திப்பார்ப்பாள் பார்