மரம் எங்கே

மரம் எங்கே?
@@@@@@
வீட்டுக்கு முன்னாடி தானே இருக்குது. மரம் காணாமல் போன மாதிரி கேட்கிறாயே?
@@@@@@
அந்த மரம் அப்படியே தான் இருக்குது? உங்க மரம் 🌲 எங்கே?
@@@@@@
வீட்டுக்கு முன்னாடி இருப்பது எங்க மரம் தானே!
@@@@@@@
அது உங்க மரம் தான். சந்தேகம் இல்லை. உங்கள் வீட்டு நடமாடும் மரம் எங்கே?
@@@@@@
என்னடா தம்பி பைத்தியக்காரத்தனமான நடமாடும் மரம் எங்கேனு கேட்கிறாய்? எந்த மரமாவது நடமாடுமா? நடக்குமா? ஓடுமா? இல்லை குதிக்குமா?
@@@@@@@
அப்ப உங்க வீட்டில் மரமே இல்லையா?
########
வீட்டில் பர்மா?
@@@@@@
ஆமாம் அண்ணா. உங்க பொண்ணு தான் மரம்.
@@@@@@@@
அழகான எங்க பொண்ணை 'மரம்'னுசொல்லறயே!
@@@@@@@@
உங்க பொண்ணு பேரு என்ன?
@@@@###
ஏன் உனக்கு மறந்து போச்சா? பியாலி.
@@@@###
அந்தப் பேருக்கு பொருள் (அர்த்தம்) என்ன?
########
இந்திப் பேருன்னாவே ஸ்வீட் நேம். பெயரோட பொருள் தெரிஞ்சு என்ன செய்யப் போறோம்.
@@####
'பியாலி'ன்னா 'மரம்'னு பொருள்.
@@########
ஐயோ கடவுளே! எங்க பொண்ணோட பேரின் பொருள் தெரிஞ்சா எல்லாம் அவளை மரம், மரம்னு கூப்பிட்டு கிண்டல் பண்ணுவாங்களா நான் என்ன செய்வேன்.
@@@####
ஒரு வழக்குரைஞரைப் பார்த்து உங்களுக்கு பிடித்த தமிழ்ப் பேரை அவரிடம் சொல்லுங்க. அவர் அந்தப் பேரை அரசிதழில் (Gazette) பதிவிடத் தேவையானதைச் செய்வார்.
########
மிக்க மகிழ்ச்சிடா தம்பி தமிழரசா.
@@@@#####@@@@@@@#@@@######@##
Piyali = Tree.
***************************************************
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

எழுதியவர் : மலர் (28-Aug-23, 4:23 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : maram engae
பார்வை : 114

மேலே