அற்பன் சிந்தாபாத்து

ஏன்டி வெண்ணிலா...
@@@@@
சொல்லுங்க பாட்டி.
@@@@@@@
உன்னோட அப்பனும் அம்மாவும் உனக்கு 'வெண்ணிலா'னு அழகான தமிழ்ப் பேரை வச்சிருக்கிறாங்க. உனக்கு முதல் மகப்பேறிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்திருக்குது. அந்தக் குழந்தைக்கு தமிழ்ப் பேரை வச்சிருக்கிறயா? அல்லது நம்ம தமிழ் சனங்கள் மாதிரி இந்திப் பேரை வச்சிருக்கிறயா?
@@@@##@
பாட்டி, காலம் மாறிப்போச்சு. இந்திப் பேரை தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கிற தமிழர்கள் தான் உண்மையான பச்சைத் தமிழர்கள். அவுங்களுக்கும் இந்திப் பேரு உள்ள குழந்தைகளுக்கும் தான் மரியாதை. தமிழ்ப் பேரைக் கேட்டாலே தமிழ் ஆசிரியர்கள், பேராசிரியர்களே முகத்தைச் சுளிக்கிறாங்க.
@@@@@@@
அப்ப உன் பையனுக்கு இந்திப் பேரைத் தான் வச்சிருக்கிறயா?
@######
அதில் என்ன சந்தேகம் பாட்டி. எம் பையன் பேரு 'அர்பன்'.
@@@@@@
என்னது 'அற்பன்'னா? ஏன்டி அவன் வளந்ததுக்கப்பறம் அவனைப் பார்த்து மற்ற பையன்கள் "அவன் ஒரு அற்பன். அற்பப் பயல்"னு கிண்டல் செய்தா என்னடி செய்வ?
@@@@@@@@
அவுங்க கிட்ட 'அர்பன்' தமிழ்ப் பேரு இல்லை. இந்திப் பேருன்னு சொன்னாள் போதும் பால் குடிக்கிற குழந்தைகூட "அர்பன் ஸ்வீட் நேம்"னு சொல்லும்.
@@@@@@@@
உம் சொல்லும். சொல்லும். செய் (ஜெய்) அற்பன். அற்பன் சிந்தாபாத்துனு கூடச் சொல்லும்டி .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Arpan = Offering.

எழுதியவர் : மலர் (27-Aug-23, 6:58 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 43

மேலே