கவிஞர் முத்துலிங்கம்
கவிஞர் முத்துலிங்கம்
××××××××××××××××××××
சிவகங்கையில் பூத்திட்டச்
சிவந்தச் செந்தூரப்பூவே
பாவால் தமிழுக்கு
பாமாலைச் சூடியோனே
முத்தான வரிகளால்
முத்தாப்பான அறிவுரைப்
பித்தான மாந்தரின்
பிணியகட்டும் மருந்தே
கையை வகைப்படுத்தி
கையினைப் புகழ்பாட
கைவிரல் காட்டியோர்
அரசியலில் முதல்வரானாரே
திறமை முயற்சி
நம்பிக்கை உயர்வு
மறவாதிருக்க முன்னேற்றம்
தானேவரும் யென்றாரே
இறைவன் உருவிலோ
யாவர் உதவியிலோ
எதிர்காலம் ஒன்று
எல்லோர்க்கும் உண்டென்றாரே
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்