சண்டியூர் கண்ணகி
சண்டியூர் கண்ணகி.
என் கண்முன் தெரிவது
எல்லாம்
சண்டியூர் வயல்கள்
அங்கு நான் காண்பது
எல்லாம்
சண்டியூர் கண்ணகியே
வானத்தில் பறந்து செல்லும்
பறவைகளும்
குளத்தில் மீன்பிடிக்கும்
கொக்குகளும்
அவளே
கதிர் சுமந்து தலை குனிந்து
நிற்கும் பயிர்களும்
அவளே
என் வாழ்வில் களை
புடுங்கியவளும்
அவளே
வெற்றிக் கதிர்களை அறுத்து
வழங்கியவளும்
அவளே
ஓடத்தில் என்னை அக்கரைக்கு
அழைத்து செல்பவளும்
அவளே
அக்கரையில் என்னை
வரவேற்க நிற்பவளும்
அவளே
என் மனதை நிரப்பி
நிற்பவளும்
அவளே
அவளின்றி நான் இல்லை.
ஆக்கம்
சண்டியூர் பாலன்..