விருத்த மேடை - 58 - கற்கண்டே நீயெனக்குச் சொற்சுடரே காதலியே - எண்சீர் ஆசிரிய விருத்தம்
விருத்த மேடை - 58
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(எட்டு காய் வேறு) 11
(1, 5 சீரும் மோனை)
(ஒவ்வோர் அரையடியில் 1 ஆம் சீரும் 3 ஆம் சீரும் எதுகையால் ஒன்றும்)
கண்ணிரண்டில் காட்சிதரும் விண்மீனாய்க் கற்பனையின்
..காட்சியிலே நீதந்தாய் மீட்சியினை யென்னவளே!
கண்கலந்த பின்னாலே உண்கலமுந் தேவையில்லை
..காட்டுகின்ற அன்பதனால் மீட்டிவிட்டாய் யென்மனத்தை!
கண்கலக்கம் ஏதுக்கடி கண்குளிர்ச்சி கொண்டாலே
..காலமெலாம் இன்புறலாம் நீலமயில் போன்றவளே;
கண்சிவத்தல் தேவையில்லை கண்ணடித்துக் காட்டுவயே
..கற்கண்டே நீயெனக்குச் சொற்சுடரே காதலியே!
– வ.க.கன்னியப்பன்