கவலை யினியேன் கனிவாய்ச் சொலு,நீ - எண்சீர் ஆசிரிய விருத்தம்
எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(புளிமா 8)
(1, 5 சீர்களில் மோனை)
கலைஞ னெனவே களிப்பிற் சொலவும்
..களிப்பி னுருவாய் கருத்திற் சொலவு
முலகை யுலுக்கு முவப்பு மிகவே
..யுனைநா னினைந்தே னினிநீ வருவாய்!
கலையும் நினைவும் கருத்தில் வருமே
,,கவலை யினியேன் கனிவாய்ச் சொலு,நீ;
குலுக்கி யெடுக்கும் குரலின் செறிவும்
..குலைதல் நிலைத்தோ வுரைப்பாய் மயிலே!
– வ.க.கன்னியப்பன்