பெருநெறி போற்றும் பெண்ணே - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)

பெருவெளி கண்ட யாவும்
..பேணியே வாங்க வேண்டாம்;
வரைமுறை யின்றி வாங்கின்
..வறட்சியே காணும் வாழ்வில்;
பொருணிலை அறிந்த பின்னே
..பொருட்களும் வாங்க வேண்டும்;
பெருநெறி போற்றும் பெண்ணே
..பெருநிலை பெற்றே வாழ்வாய்!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Sep-23, 6:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே