சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 52

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 52
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கரன்கோவிலில் தலத்தில் பைரவரின் சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அந்தகாசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால்
ஆணவம் கொண்டு தேவர்களை வதைத்தான்
சிவபெருமானிடமிருந்து இருள் என்ற
சக்தியைப் பெற்று உலகை இருள்மயமாக்கினான்
தேவர்களைப் பெண் வேடமிட்டுச் சாமரம்
வீசிடப் பணித்தான்

தேவர்கள் சிவனிடம் அரக்கனை அழித்திட
வேண்டிட தாருகாபுரத்தை எரித்த
காலாக்னியை பைரவராகச் சிவன் உருமாற்ற
எட்டுத்திசையிலும் எட்டுப் பைரவர் தோன்றி
எட்டுத்திசை இருளை அகற்றி அரக்கனை அழித்து

சிவபெருமானின் அறுபத்துநான்கு திருமேனிகளில் ஒருவரும்
சிவபெருமானின் ருந்தர ரூபமாக சொல்லப்படுபவரும்
சிவன் கோவில்களில் வடகிழக்கில் நின்ற
கோலத்தில் ஆடைகள் இன்றி
பன்னிரு கைகளுடன் நாகத்தைப் பூணூலாகவும்
சந்திரனைத் தலையில் வைத்து
சூலாயுதம் பாசக்கயற் அங்குசம் ஆயுதங்கள்
தாங்கி நிர்வாண ரூபமாக காட்சி
தரும் கால பைரவர் சனியின் குருவாகவும்
பன்னிரெண்டு ராசிகளின் எட்டுத் திசையாகவும்
பஞ்சபூதங்கள் நவக்கிரகங்களையும் காலத்தையும் கட்டுப்படுத்துபவர்
சக்தி பீடங்களில் காவல் தெய்வமாக இருப்பவர்

செவ்வாய்க்கிழமை வரும் அஷ்டமியில்
இருபத்து ஒரு முறை விரதம்
தொடர்ந்தால் மிகச் சிறப்பு
பாவங்களைப் போக்கி இன்ப வாழ்வை
பைரவரை வணங்கிட தந்திடுவார்...

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (7-Sep-23, 6:04 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 23

மேலே