சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 51

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 51
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கரன்கோவிலில் தலத்தில் சனி பகவான் சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நவக்கிரகங்களில் ஒருவர் சூரியதேவன் சாயாதேவி
நற்தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்
காகத்தினை வாகனமாகக் கொண்டவர்
கால் ஊனத்தால் மந்தமாக நடப்பவர்
மந்தன் என துணைப்பெயர் உடையவர்

சூரியதேவன் மனைவி சந்தியாதேவி
சூரியன் பக்கத்திலிருப்பதால்
வெப்பத்தினால்
சக்தியை இழந்ததால் பூலோகம் வந்து
சக்தியை மீன்டும் பெற எண்ணி

சூரியனிடம் சொல்லப் பயந்தவள்
சூரிய ஒளியின் தன் நிழலில்
பெண் உருவம் அமைத்து
பெண்ணுக்குச் சாயாதேவியெனப் பெயரிட்டாள்

சந்தியாதேவி தவம் செய்யப் பூலோகம் வர
சூரியன் சாயாதேவியுடன் வாழ்ந்து வர
சனி பகவான் பிறந்தார்
சனி கருமை நிறத்தில் இருந்தான்
நிழலில் உருவான சாயாதேவிக்கு பிறந்தமையால்

சனி கருமை நிறத்தில் பிறந்ததால்
சூரியன் தன் பிள்ளையாக ஏற்க மறுக்க
சாயா தேவி கண்ணில் கண்ணீர் பெருக்கெடுக்க
சனி தாயின் கண்ணீரைக் கண்டவுடன்
சினத்துடன வக்ரபார்வையால் சூரியனைப் பார்க்க
சூரியன் மீது கிரகணம் ஏற்பட
சனியின் சக்தியை சிவனிடம் சூரியன் கேட்க

தேவர் கடவுள் மக்களெனப் பாகுபாடின்றி
அவர்கள் செய்தப் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப
பலன்களைத் தரவே சனி பிறந்தவன் என
பெருமையாக சிவன் சொல்ல சூரியன்
சனியைத் தன் புதல்வனாக ஏற்றார்

பாரபட்சமின்றி நீதி வழங்க
பந்த பாசங்களை துறந்து
பெற்றோரை பிரிந்து சனிபகவான்
சனிலோகத்தில் வாழத் துவங்கி
சங்கரன்கோவில் வந்த சனி பகவான்
சங்கரலிங்கர் சன்னதியின் வடப்புறத்தில் வீற்றிருந்து
சங்கைத் தலத்திற்கு வந்து வணங்கிடுவோர்க்கு
சங்கடங்கள் அனைத்தும் தீர்த்து வைக்கிறார்....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (6-Sep-23, 5:39 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 12

மேலே