அரும்மாசைகள்
நீல வானின்
நிலவு முகத்தில்
நினைவாக வீடுகட்ட
நிறைய ஆசை....
நிலவுவீட்டின் நாற்புறமும்
பசுஞ்சோலை நிறுவிட
நினைவு தெரிந்த
நாளாய் ஆசை......
மதிமயக்கும் வாசத்துடன்
மறக்காமல் வீற்றிருக்கும்
மல்லிகை வகைகள்
என்வீட்டு தோட்டத்தில்.....
மாலைப் பவுர்ணமியின்
மங்காத வெளியில்
மௌனமொழி பேச
மனம்கொள்ளா ஆசை....
நிலவாற்றங்கரை ஓரம்
ஒய்யாரமாக அமர்ந்து
அமிர்தமான நன்நீரில்
கரமலைந்திட ஆசை.....
நீ(ள)ல வானில்
நட்சத்திர கூட்டத்தினிடை
நிதானமாக நடைபயிள
கொள்ளை ஆசை....
சிதரித் தெரித்த
சின்ன வைரங்களை
அள்ளி அனைக்க
அடங்கா ஆசை....
சிறகை விரித்து
பரவசமாய் பறப்பேன்
பால்நிலவை நோக்கி
நித்தம் கனவினில்.....
எல்லையில்லா கனவுக்
கூடாரத்தில் குறைவில்லாமல்
குதூகலமாக நிறைவேறும்
யென்மன ஆசைகள்......
கவிபாரதீ ✍️