இவள் குளிர் மென் விரல்களால் நாங்கள் நித்தம் புத்தம் புதிதாய் மலர்வோம்
பூக்களை மறந்த தென்றல்
நதியில் உலாவச் சென்றது
நதியில் நீரில்லை
திரும்பி வந்த தென்றலை
நலம் விசாரித்த பூக்கள்
இவள் குளிர் மென் விரல்களால்
நாங்கள் நித்தம் புத்தம் புதிதாய் மலர்வோம்
சென்று வா தென்றலே என்று
விடைகொடுத்து அனுப்பின