பேரழகு பெண்ணே
ஆசிரியப்பா
அந்த பஞ்சில வமென்மை அருகா
போட்டி என்று வந்திட அழகேநின்
உடல்நெளிவை எதைத்தான் ஒப்பீடு செய்ய
அன்ன மென்றார் அழகு மயிலாம்
உண்மை யில்லை ஒன்றும் உவமைசொல்ல
பெண்ணேயுன் மயக்கு போதை விழிக்கு
எங்கு சென்று உவமை எடுப்பர்
அசைவு ஒவ்வொன்று ஓர்வித அழகென்பேன்
பெண்டிர் பேரழகு ஒப்பிட
எண்டிசையிர் ஏதுமில்லை உண்மை சொல்வேனே. .......