நிலவைத் தொட்டோமே மனிதர்களை

குழந்தைகள் தினம்
கொண்டாடுகிறோம்
ஆனால் குழந்தைகள் மனம் கொண்டாட மறந்து விட்டோம்

சந்திரனைத் தேடி அலைகின்றோம்
உலகில்
எந்திரன் ஆகவே விளைகின்றோம்

இரும்புகளாகவே வளைகின்றோம்
இதயம் என்ற ஒன்றைக் கலைகின்றோம்

நிலவைத் தொட்டோம்
ஏழைகளின் நிழலைத்
தொட மறந்து விட்டோம்

கனவு காணச் சொன்னார்
ஜனாதிபதி அப்துல் கலாம்
அதற்காக கனவுகளை மட்டுமே கண்டு கொண்டிருக்கின்றோம்

சந்திராயன் நிலவைத் தொட்டது
சில மனிதர்களின் செயல்கள் தான் சந்தி சிரிக்கின்றது

செயற்கைக்கோளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதன் இயற்கைக் கோளுக்கும் தன் குறிக்கோளுக்கும் கொடுப்பதில்லை.

லட்சங்களுக்கு கொடுக்கும் மதிப்பை லட்சியங்களுக்கு கொடுப்பதில்லை

இயந்திரங்களுக்கு கொடுக்கும் மதிப்பை இதயங்களுக்கு கொடுப்பதில்லை

நிலவின் மனதை தொடுவதை விட்டுவிட்டு வரியோர் நிழலின் மனதை தொடுவோம்.

புதிய சமூகம் படைப்போம்.

எழுதியவர் : Kumar (17-Sep-23, 2:33 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 59

மேலே