மனிதநேயம் போற்றுவோம்
மனிதநேயம் போற்றுவோம்.
17 / 09 / 23
பயணத்தை தொடங்கிட தனியாக வந்தோம்
பயணத்தின் இடையினில் உறவோடு கலந்தோம்
பயணத்தின் சுகங்களை தனியாக சுவைத்தோம்
பயணத்தின் முடிவினால் தனியாக போவோம்.
பிறக்கும்போது வெறுங் கையோடு பிறந்தோம்
பிறந்தபின் உலகில் உள்ளதை அனுபவித்தோம்
தற்காலிக அரசனாய் கோலோச்சி ஆண்டோம்
இறந்தபின் வெறுங் கையோடுதான் போவோம்.
கொண்டுவந்ததும் ஒன்றுமில்லை கொண்டுபோவதும் ஒன்றுமில்லை
ஆண்டு அனுபவித்ததும் நிரந்தரமில்லை
தொண்டு கிழவனானபின் உணர்வதில்லை பிரயோஜனமில்லை
உண்டு உறங்கியது போதும் மனிதநேயம் போற்றுவோம்.