அழுக்கு மூட்டை
அழுக்கு மூட்டை
%%%%%%%%%%
துன்பத்தைச் சேர்த்து
தோளில் மூட்டையாக/
சுமைந்திட வேண்டாம்
சுகமானது இல்லை/
சோகங்கள் அனைத்தையும்
சுகமாகக் கண்டிடு/
ஆசையேத் துன்பத்திற்கு
ஆரம்ப வழியாகும்/
பெண்ணாசை பொன்னாசை
புதைத்திடு மனதில்/
வானத்துப் பறவைகள்
வயிற்றுக்கு உணவைச்/
சேர்த்து வைப்பதுமில்லை
சஞ்சலப் படுவதுமில்லை /
பறவைகளைப் பார்த்து
பேராசையின்றி வாழ்ந்திடு /
இன்பம் துன்பம்
இரவுப் பகலாக/
வந்தேச் சென்றிடும்
வருந்தாதே மகிழ்ந்திடு/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்