அம்பி கம்பி
சோதிடர்: வாம்மா மாகாளி. நல்ல செய்தி தானே.
@@@@@@
ஆமாங்க சோதிடர் ஐயா. எங்க கடைசிப் பையன் மனைவிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்குதுங்க. இந்தாங்க இந்தக் குறிப்பைப் பாருங்க. பிறந்த தேதி, நேரம் எல்லாம் இருக்குது. சாதகக் குறிப்பு எழுதிக் கொடுங்க. அப்படியே இரண்டு குழந்தைகளுக்கும் அவுங்க இராசிப்படி பொருத்தமான பேருங்கள நீங்களே சொல்லுங்க.
@@@@@
இரண்டு குழந்தைகளும் பையன்கள். பிறந்த நேரம் இராசி எல்லாம் சிறப்பாக இருக்குது. நல்லார் படிக்க வச்சா இரண்டு பேரும் பெரிய அதிகாரிகளா வருவாங்க.
@@@@@@@
சரிங்க சோதிடரே. நல்ல, பொருத்தமான பேருங்களால சொல்லிட்டு சாதகக் குறிப்பில் எழுதிடுங்க.
@@@@@@@@
இந்திப் பேருதானே?
@@@@@@@
ஆமாங்க ஐயா. இந்தக் காலத்தில் நம்ம தமிழ் மக்கள் பெத்த பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பேருங்கள வைக்கிறதை இழிவான நினைக்கிறாங்க. நம்ம ஊரில் நாற்பது வயசுக்குக்கும் கீழே இருக்கிற ஒரு பொண்ணு பையன் பேருகூடத் தமிழ்ப் பேரு இல்லை. தமிழ்ப் பேருங்கள வைக்காதீங்க ஐயா.
@@@##@##
சரி மாகாளி உன் விருப்பப்படியே இரண்டு குழந்தைகளுக்கும் இராசிப்படி பொருத்தமான இந்திப் பேருங்களையோ வைக்கிறேன்.
@@@##@
சொல்லுங்க ஐயா.
@@@@@@@
ஒரு பையன் பேரு அம்பி. இன்னொரு பையன் பேரு கம்பி. இரண்டுமே கலப்படமில்லாத இந்திப் பேருங்க.
@@@@@@@@
அது போதுங்க ஐயா. நம்ம ஊர்ல எந்தக் குழந்தைக்கும் இந்த மாதிரி பேரு இல்லங்க ஐயா. எல்லாரும் இந்தப் பேருங்களப் பாராட்டுவாங்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Ambi = Immortal. Unisex name. Indian, Persian (Iranian) Bulgarian origin.
Kambi = Fortunate. Masculine name. Indian, Persian (Iranian) origin.
@@@@@@@@@@@@@@@@@@@@#@####@###################################
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

