சந்திரயான் ஒன்றும் பெரிய சாதனை இல்லை

காண்பவர் கண்களை கவரும் மீன்களை வலைவீசி பிடிக்கிறோம்
தாய்க்கோழி பொரித்த குஞ்சுகளை வாணலியில் பொரிக்கிறோம்
குஞ்சுகளை பிரிந்த தாய்க்கோழிகளின் இறகுகளை உரிக்கிறோம்
அன்புடன் ஊட்டி வளர்த்த ஆடுகளை உணவுக்காக வெட்டுகிறோம்
பச்சை குழந்தை போன்ற ஆட்டுகுட்டிகளின் தலையை சீவுகிறோம்
நிரபராதி பன்னிகளை பரிதாபமாக ஓலமிடவிட்டு அறுக்கின்றோம்
அப்பாவி மாடுகளை மேய விடாமல் கொன்று தின்று மகிழ்கிறோம்!
இத்துடன் நின்றுவிடவில்லை மனித முன்னேற்றம், இன்னும் உள்ளது
பொன்னுக்காக பொருளுக்காக மனிதனை மனிதனே கொல்கிறான்
மண்ணுக்காக பெண்ணுக்காக தனது இனத்தினரையே அழிக்கிறான்
பேராசையால், புகழாசையால் மற்றவர்களை சுட்டுக்கொல்கிறான்
சாதி, சமயம், இனம் என பிரித்து சமுதாயத்தை மாசுபடுத்துகிறான்
மனிதன் விலங்குகளைத் தின்பது, மனிதனையே கொலை செய்வது
கேட்டீயளா இவற்றிற்குமுன் சந்திரயான் சாதனை ஒன்னும் இல்லை!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (23-Sep-23, 1:29 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 78

மேலே