சிலப்பதிகாரம் ஒரு பார்வை

பரத்தையர் வாசத்தில் வாசம் பிடித்த
கோவலனின் சக தர்மினி பன்னிரண்டு ஆண்டுகளாக ஈன காமுகன் வரவிற்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்த நீ பத்தினி தான் சந்தேகமில்லை சகியே....

பால்குடிமறவா சிறுமிக்கு மணம் மென்பதே
இன்றைய சமூகம் ஏற்காத ஏற்பாடு,
பரத்தை சகவாசத்தில் பரிதவிக்க விட்ட
மணாளனை மனதில் வரித்து மாசற்று
காத்திருந்த கண்ணகியின் மன வேதனை
குருதிகொட்டும் இதயத்தை கசக்கிப் பிழிவதாம்....

மாற்றம் ஏற்று மணாளனுடன் மதுரை
அடைந்த உன் விசாலமனம் கண்டு
மயிற்கூச் சடைகிறேன், சிரம்தாழ்ந்த முதற்கண் வணக்கம் சமர்ப்பணம்.
காற்ச்சிலம்பை கொடுத்த உன் பற்றற்ற
தன்மையும் மகிழ்வுக்கு உரியது குலமகளே....

காவியம் படைத்திட ஆசை யெனில்
ஊணுயிர் உருக்கி உழைத்திருப்பின்
பாரெல்லாம் பரவசமாய் புகழ்ந்திருக்குமே ..
தவறிழைத்த கணவனை மன்னித்த நீ,
தொடர்பே யற்ற மதுரையைத் தீக்கிரை யாக்கியது
சரியா? வஞ்சனையல்லாது யாது இது!!!!

பத்தினி சொல் அரங்கேறும் என்ற
அகம் சிரமேற சீறிக் கிளம்பினாயோ?
குஞ்சும் குறுத்துமாக குலநாசம் செய்து
சேரமண்ணில் தஞ்சம் புகுந்த நீ
செங்குட்டுவன் கரங்களால் ஆலயம் எழுப்பி
அகமகிழ்ந் தாயோ எரிதணழே.....

அடித்துநீ உடைத்த சிலம்பிலிருந்து முத்துக்கு பதிலாக தெறித்து விழுந்த மாணிக்க பரல்களைக் கண்ட நொடியில் அறம்
தவறி தாம் இழைத்த மாபெரும்
பிழையைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்த
பாண்டியன் தமக்குத் தாமே அளித்த
தண்டனை மிகச்சிறப்பு.....

தவறி ழைப்பது மனித இயல்பு
தவற்றை உணர்ந்து அக் கனமே
உயிர் துறந்த பாண்டியன் சிறப்புற்றான்,
கணவன் உயிர் பிரிந்த நொடியே
தன் னுயிர் நீத்தப் பாண்டியன்
மனையாளும் மிகப் பெரும் பத்தினியே!!!!

உன் கணவன் உயிர் பறித்த
பாண்டியன் உயிர் நீத்த பின்பும்
உன் கோவம் குறையாதது ஏன்?
தவறி ழைத்தது மன்னனாக இருப்பினும்
தவறு தவறுதானென்ற அறம் நின்றது,
உடனுயிர் நீத்து பத்தினி தர்மமும்
நிலை நாட்டப் பட்டது பெருமைதான்....

ஆடல ரசியின் அழகில் தனைமறந்து
சக தர்மினியை சாகாமல் சாகடித்த
கோவலன் சிரம் கழித்தது கர்மத்தின்
பலனால் விழைந்த கனகச்சிதமான தண்டனை, ஆயினும் ஆடல் பிரியனின்
மாடலனென்ற சக நண்பன்....


"இம்மைச் செய்தன யானறி நல்வினை​

உம்மைப் பயன்கொல்”

என் றுரைத்ததாக சிலம்பு கூறுகிறது.

அஃதாவது கோவலன் இப்பிறவியில்
தவறி ழைக்காத நேர்மையானவன் என்றும்
அவனின் முப்பிறவி பாவத்தின் பலனாகவே
இத்தண்டனையை அவ னடைந்தது என்றுரைக் கின்றான்.

பச்சிளம் சகதர்ம பத்தினியை விடுத்து
பன்னிரெண்டு ஆண்டுகள் பரத்தையை சுகித்திருத்தல் தவறே இல்லை என்றுரைக்கும்
சிலம்பின் சிறப்பை பறைசாற்றுகிறது இவ்வுலகம் ...????


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (21-Sep-23, 7:42 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 160

சிறந்த கட்டுரைகள்

மேலே