ஆசைக் காதலனே
ஆசைக் காதலனே
●●●●●●●●●●
அன்பால் உருவான ஆசைக் காதலனே /
அல்லிகள் விளையாடும் தாமரைக் குளக்கரையில் /
தனிமையில் காத்திருக்கேன் ஒற்றைப் பனைமரமா /
தனிச்சுவை நானும்தாரேன் என்னை மொய்த்திடவா /
பூப்பெய்த நாள்முதல் தேன்சுவைக்கும் வண்டுகளைப்போல் /
பூச்சூடி காத்திருக்கேன் தேன்சுவைக்க நீவருவாய்யென /
கதிரவன் வானத்தை வட்டமடித்து வருவதுபோல் /
காலமெல்லாம் உன்னை சுற்றி நான்வருவேன் /
கடல் தண்ணீர் அலை போல /
கடைசிவரை நான் உன்னுடன் வருவேன் /