நெஞ்செல்லாம் நீதானே

நெஞ்செல்லாம் நீதானே
••••••••••••••••••••••••••••••••••○

நீ தானே நீ தானே
என் நெஞ்சம் முழுமையும் நீதானே

உன்னை கண்ட நாள் முதல்

கண்ணின் கருவிழிக்குள் தெரிவதும் நீதானே

உதடுகள் உச்சரிக்கும் பெயர் நீதானே

சுவாசத்தில் கலந்த விசுவாசம் நீதானே

காதில் கேட்கும் கானாப்படலும் நீதானே

கைகள் எழதும் கவிதையும் நீதானே

இதயத்தில் சரிபாதி குடியிருப்பது நீதானே

நினையாத நாளில்லை நினைவெல்லாம் நீதானே

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (25-Sep-23, 5:49 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 176

மேலே