இலஞ்சப் பணத்தா லிலங்கு குடும்ப மின்னலுறும் - கலித்துறை
கலித்துறை
(மா 4 / கூவிளங்காய்)
இலஞ்சப் பணத்தா லிலங்கு குடும்ப மின்னலுறும்;
அலட்ட றன்னை ஆங்க மைத்தா லல்லலன்றோ!
விலங்கு போன்ற வேற்று குணத்தாற் வேதனைதான்;
நிலையா யுள்ள நேர்,கு ணந்தான் நிம்மதியே!
- வ.க.கன்னியப்பன்