சொன்னதை மீண்டு மீண்டுஞ் சொல்லற் றீது - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)
சொன்னதை மீண்டு மீண்டுஞ்
..சொதப்பியே சொல்லற் றீது;
இன்சபை தன்னிற் சொல்ல
..வினிதுற வமைதல் வேண்டும்!
இன்புறு வகையிற் சொன்னா
..லெளிதினிற் புரித லாகும்;
இன்சுவைப் பாட லொன்றே
..யினிமையைத் தருவ தாகும்!
- வ.க.கன்னியப்பன்