நற்,பொழிப்பு மோனையின்றி நாம்பாடல் சொல்லிவரின் - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
நற்,பொழிப்பு மோனையின்றி நாம்பாடல் சொல்லிவரின்
..நலமே தானோ;
அற்பசொற்பம் கற்றகல்வி ஆங்கெமக்கு மறந்திடுமோ
..ஆக்க மின்றி!
நற்பழக்கம் நந்தமிழி லுள்ளவர்க்கே நலமாகும்
..நானுஞ் சொன்னேன்;
பற்றுவைத்தே இன்தமிழைப் பாங்குடனே கற்றுவரின்
..பாட்டும் நன்றே!
- வ.க.கன்னியப்பன்