சிவனருளாலே சிந்தியவைகளே -- நிலைமண்டில ஆசிரியப்பா

சிவனருளாலே சிந்தியவைகளே
***********
(நிலைமண்டில ஆசிரியப்பா)
இரண்டடிக்கு ஓர் எதுகை. 1 மற்றும் 3 ல் மோனை.

குழவிப் பிறையான் கோயிற் பணியோன்
அழுது அருந்தி அகவல் இசைத்தோன்
அதிகா ரத்தொடு அன்பைப் பெற்றோன்
குதிரை வாங்கா கோயில் கண்டோன்
இவர்கள் நால்வரும் இயம்பிய தனைத்தும்
சிவன ருளாலே சிந்திய வைகளே!
*******
குழவிப் பிறையான் = சிவபெருமான்
கோயிற் பணியோன் = உழவாரப்பணி
செய்த அப்பர்
அழுது அருந்தி. . . . . . = ஞானசம்பந்தர்
அதிகா ரத்தொடு. .. . . = சுந்தரர்
குதிரை வாங்கா. . . . . = மணிவாசகர்

எழுதியவர் : சக்கரை வாசன் (28-Sep-23, 6:26 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 65

மேலே