நிலவில் காலடி வைத்த சந்திராயம் 3

நிலவைத்தேடி பயணித்த இயந்தியாவின் இதயமே,
இந்திய விஞ்ஞானிகளின் மூளையில் உதித்த செல்லக் குழந்தையே;
சவாலை ஏற்று சாதனை படைக்க புறப்பட்டவனே,
விக்ரம் நலந்தானா!
உன் பிஞ்சுக்கால்கள் பிரபஞ்சத்தில் பயணித்து
நிலவில் காலடி எடுத்து வைப்பதற்குள்
எத்தனை பதட்டம் ,
எத்தனை பட படப்பு,
எத்தனை எதிர்பார்பு,
இந்தியனின் நம்பிக்கை நட்சத்திரமே;
சாதித்து காட்டி விட்டாய், சாதனை படைத்து விட்டாய்
சரித்திரத்தில் இடமும் பிடித்து விட்டாய்,
உலகையே உன் பக்கம் திரும்பி பார்க்கவும் வைத்து விட்டாய்,
நீ இந்தியக் குழந்தைகளின் கனவையும் நனவாக்கிவிட்டாய்,
இன்று
இந்தியத் தாய்மார்களின் நம்பிக்கை நட்சத்திரமே,
நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா என்று இனி
நம் தாய்மார்கள் அழைக்கத்தேவையில்லை,
நிலவிற்கே சென்று நீலாச் சோரு ஊட்டலாம் தங்கள் குழந்தைகளுக்கு,
இருண்ட பகுதியில் இறங்கி விட்டோம் என்று பயப்படாதே,
உன்னை அத்தனை கோடி கண்களும் பார்த்துக்கொண்டு இருக்கிறது
நிலாவும் நம் வம்சா வழிதான்,
பத்திரமாய் உன்னை வைத்துக்கொள்ளும்
நீ உன் சாதனையை படைத்துக் கொண்டே இரு.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (28-Sep-23, 6:47 pm)
பார்வை : 20

மேலே