பாத்திரம் அறிந்து பிச்சையிடு

பாத்திரம் அறிந்து பிச்சையிடு
××××××××××××××××××××××××××
நற்செயலை அன்றே
செய்திடல் சிறப்பு
அஃது ஈகையாக
செய்திடல் மிகச்சிறப்பு

கையிருப்பு தெரிந்து
பாத்திரம் அறிந்து
அவசியம் புரிந்து
தர்மம் வழங்கிடு

மனதால் பண்போடு
சொல்லால் மெய்யோடு
செயலால் பணிவோடு
அறம்செய் கனிவோடு

துன்பம் விடைபெறும்
இன்பம் நல்வரவாகும்
வறுமை முடிவாகும்
கடமை நமதாகும்..

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (30-Sep-23, 12:45 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 63

மேலே