சினம் விடு
சிகரம் தொடு;
ஆணவத்தைவிடு;
ஆக்கத்தை தொடு;
ஏக்கத்தை விடு;
அஞ்சி வாழாதே;
கெஞ்சி வாழாதே;
மிஞ்சி வாழாதே;
மிச்ச வாழ்க்கையை இழக்காதே;
நேற்றய தோல்வியை நாளைய வெற்றியாக்கு;
இன்றைய முயற்சியை நாட்களை தாண்டி சாதனையாக்கு;
உளமாற நினைத்துவிட்டால் மனமாற மன்னிப்பு பிறக்கும்;
உள்ளம் பழுது பட்டால் இல்லம் இருண்டுவிடும்;
புழுதியில் இல்லை புரட்சி;
புழுங்கினால் வராது மகிழ்ச்சி;
புரிதலில் உண்டு மறுமலர்ச்சி;
மகிழ்ச்சியே புத்துணர்ச்சி;
தூக்கமே அயற்ச்சி;
துக்கமே இகழ்ச்சி;
துவங்கினால் முயற்சி;
தேவைக்கு தேடினால் மகிழ்ச்சி;
தேவையற்றதை ஒதுக்கினால் நிம்மதி;
தேடி வராது வாய்ப்பு;
தேடத்துவங்கினால் புரட்சி;
தேவையற்றவற்றை எண்ணி வறுத்தப்படுவதை விட,
தேவையான வற்றை பற்றி கனவு கண்டால் வெகுமதி;
தேங்கி தேங்கி அழத்துவங்கினும், தேக்கிய சோகம் தாக்காமல் விடாது;
தவறை தவறாக்க நினைக்காதே ; தவறை திருத்த நினை;
தவறியும் தடுமாறாதே; தவறுதலாகவும் வார்த்தைகளை விடாதே;
உளமாற நினைத்திடு;
மனமாற மன்னித்திடு;
உண்மையான அன்பு உருக்கிவிடும்
போலியான அன்பு கேளியாக்கிவிடும்;
அகலக்கால் வைக்காதே;
அகல்விளக்காய் எரிந்திடு;
ஆணியாய் பிறரை குத்தாதே;
ஏணியாய் ஏற்றிவிட பழகு;
உடன்பாடு இல்லாவிட்டாலும்,
உயிர் காக்கும் படகாய் உதவிடு;
ஊர் குருவியாய் கத்தி கதறி திரியாது;
உனக்கு வேண்டியதை நீயே தேடிடு;
பிறரை காயப்படுத்துவதைவிட,
பிறருக்காக கண்ணீர் விடு;
உண்மையாய் உறவாடிடு;
கண்ணியம் காத்திடு;
நன்மையே நாளும் செய்துடு;
கடமையை செய்திடு ;
உனக்கு உடமை இல்லாததை உதறிவிடு;
உனக்குள் உருவாகிவிடு;
உயரே பறக்கும் பருந்தாய் தேடலை துவங்கிவிடு;
நேசத்தில் வேசம் போடாதே;
நாசத்தை நல்லது என்று நம்பாதே;
தோசத்தை உண்மை என்று நம்பாதே;
வேசம் போட்டு உன்னையே மறைக்காதே;
பிதற்றலின் பேத்தலே பிடிவாதம்;
பொறாமையை விடு, பொறுமையை எடு.
அதட்டலின் ஆட்டமே ஆக்ரோசம்
அமைதி காப்பதே நிம்மதி;
அன்பை கடைபிடிப்பதே நல்வழி;
இறப்பை நினைத்து இடிந்து போகாதே,
பிறப்பை புனிதமாக்கு
பிடிவாதத்தை விட்டி
பெயரை கெடுக்க நினைக்காதே;
பெயர் எடுக்க சாதித்திடு;
நெருப்பு என்றாலும் நேர்மை என்றாலும் சுடும்;
நெருக்கமும் உருக்கமும், நொறுக்கத்தான் செய்யும்;
நேசிப்பதை விட்டால் துக்கம்;
யோசிப்பதை விட்டால் துயரம்;
தீதை தீயில் இடு;
திருந்திட மனதில் இடம் கொடு;
அடிமை தனத்தை அழித்திடு;
அன்பை விதைத்திடு