தன்னம்பிக்கை

புத்தகங்கள் தரும் அனுபவங்கள் மிகவும் அவசியம்.
பிறர் சொல்லும் அனுபவங்கள் வாழ்க்கை முழுவதும் தொடரும்...
கயல் தினமும் புத்தங்களை புரட்டி
அதில் இரு வரிகளை மட்டுமே படிப்பால் போதும் இதை படித்து என்ன செய்வது..
அவள் அப்பா அம்மா படிக்காதவர்கள்.
எப்போதுமே படி படி என அவளிடம் சொல்லி கொண்டே இருக்க..இந்த பழக்கம் வந்தது.அவள் மிகவும் சுட்டி பெண் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள்..
பள்ளி இவள் தோழி வெண்பா அவள் நன்றாக படிப்பவள்...
அவளுக்கு புத்தங்கள் என்றாலே மிகவும் விருப்பம்.இருவரும் பள்ளி முடிந்ததும் நூலகம் சென்று சிறிது நேரம் கழிப்பர்..கயல் நூலகம் வெண்பா படிப்பதை வேடிக்கை பார்பால் பின் நடந்து வரும் சமயம் வெண்பா தான் படித்த அனைத்தையும் கயலிடம் ஒரு கதை சொல்லுவது போல சொல்லுவாள்..
நாட்கள் கழிந்தது ஆறாம் வகுப்பில் இருவரும் நுழைந்தனர்..
அங்கு குறள் போட்டி ,கட்டுரை,பேச்சு போட்டி என நிறைய இருந்தது..
வெண்பா அனைத்திலும் கலந்து பரிசு பெறுவாள்.கயலோ வேடிக்கை பார்பாள்.ஓர் நாள் நீ ஏன் போட்டிகளில் கலந்து கொள்ள கூடாது என வெண்பா கயலிடம் கேட்க ,அவளோ எனக்கு எதுவும் தெரியாது பரிசும் வராது என்றாள்..
உடனே வெண்பா பரிசு முக்கியம் அல்ல .அனுபங்களும் திறமையை வளர்ப்பதும் தான் முக்கியம் என்றாள்.
உடனே கயல் பெயரை கொடுத்து அனைத்து போட்டியிலும் துனை நின்றாள் வெண்பா.
கயலும் தோழியின் உதவியோடு
அனைத்து போட்டிகளுமே கலந்து கொண்டாள்.
போட்டியின் முடிவுகள் கயலுக்கு தோல்வியே வந்தது.
ஆனால் பலரின் நட்பு ஆசிரியர்களின் அறிமுகம் பல புத்தங்கள் தந்த அறிவு என ஓர் புதிய அனுபவம் கிடைத்தது.
மீண்டும் போட்டிகள் பள்ளி அளவிலும் மாவட்டங்கள் அளவிலும்
நடைப்பெற்றது.வெண்பாவும் கயலும் போட்டிகளில் கலந்து அனைத்திலும் வெற்றி பெற்று பள்ளிக்கும்,பெற்றோருக்கும் பெருமை சேர்த்தனர்..
விடா முயற்சி என்றும் வெற்றி தரும்.
நல்ல நண்பர்களின் பழக்கம்
நன்மையில் முடியும்..
புத்தகங்கள் என்றுமே நல்ல வழி துணை....
படியுங்கள் பயன் பெறுங்கள்....

எழுதியவர் : (8-Oct-23, 8:50 am)
சேர்த்தது : உமா
Tanglish : thannambikkai
பார்வை : 220

சிறந்த கவிதைகள்

மேலே